நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - ஈரோடு

Tamil nadu Election Erode
By Karthick Mar 05, 2024 11:36 PM GMT
Report

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 17-வது தொகுதி ஈரோடு.

ஈரோடு

2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் முக்கியமானது ஈரோடு.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - நாமக்கல்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - நாமக்கல்

திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும், புதிதாக ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - சேலம்

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - சேலம்


தற்போது ஈரோடு மக்களவை தொகுதிகளில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி) மற்றும் காங்கேயம் என 6 மக்களவை தொகுதிகள் உள்ளன.

தேர்தல் வரலாறு

2009 அ. கணேசமூர்த்தி (மதிமுக)

2014 செ. செல்வகுமார சின்னையன் (அதிமுக)

2019 அ. கணேசமூர்த்தி (மதிமுக)

வாக்காளர்கள் எண்ணிக்கை

கடந்த 1.1.2024 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர்கள் பட்டியலின் படி ஈரோடு மாவட்டத்தில் ,

ஆண் வாக்காளர்கள் - 9,46,965 பேர்

பெண் வாக்காளர்கள் - 10,07,576 பேர்

மூன்றாம் பாலினத்தவர் 170 என மொத்தமாக 19,54,711 வாக்காளர்கள் உள்ளனர்.