டி20 போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து கே.எல்.ராகுல் விலகல் - ரசிகர் அதிர்ச்சி

KL Rahul Rishabh Pant Indian Cricket Team
By Thahir Jun 09, 2022 03:33 AM GMT
Report

இன்று நடைபெற இருந்த இந்தியா,தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் காயம் காரணமாக வெளியேறியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வும் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகினார்.

டி20 தொடர்

இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி, 5 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டி20 போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து கே.எல்.ராகுல் விலகல் - ரசிகர் அதிர்ச்சி | Kl Rahul Resigns As T20 Captain

இந்த டி20 ஆட்டத்தில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தினேஷ் கார்த்திக்கையும் சேர்த்துள்ளதால், இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் விலகல்

இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான டி20 போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கே.எல்.ராகுல் இந்த தொடரிலிருந்து விலகினார். இதுதொடர்பாக பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,

"கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப்பை ஏற்பார். ஹார்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படுவார்" என்று குறிப்பிட்டுள்ளது.