சென்னை அணியை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக ஜடேஜா விரைவில் நியமனம் - பிரபல கிரிக்கெட் வீரர்..!

Ravindra Jadeja IPL 2022
By Thahir Apr 26, 2022 03:11 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் கேப்டனாக விரைவில் நியமனம் செய்யப்படுவார் என அந்த அணியின் சீனியர் வீரர் அம்பத்தி ராயூடு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் தோனி. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

சென்னை அணியை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக ஜடேஜா விரைவில் நியமனம் - பிரபல கிரிக்கெட் வீரர்..! | Ravindra Jadeja Next Captain India Team Rayudu

ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்ற பின் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. நடப்பு தொடரில் சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடிய நிலையில் வெறும் 2 போட்டிகளில் மட்மே வெற்றி பெற்றுள்ளது.

6 போட்டிகளில் தோல்யடைந்துள்ளதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் சென்னை அணி இழந்துவிட்டது.

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா கேப்டன் பதவி குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜடேஜா கேப்டன் பதவிக்கு சரியானவர் இல்லை அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதே அவருக்கும், சென்னை அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றே பல கிரிக்கெட் வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு சென்னை அணியின் ரசிகர்கள் மனநிலையும் இதுவாகவே உள்ளது. இது குறித்து பேசிய சீனியர் வீரர் அம்பத்தி ராயூடு,

சென்னை அணியை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக ஜடேஜா விரைவில் நியமனம் - பிரபல கிரிக்கெட் வீரர்..! | Ravindra Jadeja Next Captain India Team Rayudu

“தோனியின் இடத்தை ஈடு செய்வது ஒருபோதும் நடக்காது, எத்தனை வீரர்கள் வந்தாலும் தோனியை போன்று செயல்பட முடியாது. ஆனால் தோனி இருப்பதால் ஜடேஜாவிற்கு பல வேலைகள் இலகுவாகியுள்ளது.

தேவையான அனைத்து விசயங்களையும் ஜடேஜா, தோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். ஜடேஜா மிக சிறந்த கேப்டனாக உருவெடுப்பார்.

தற்பொழுது சென்னை அணியை வழிநடத்தி வரும் ஜடேஜா, நிச்சயமாக ஒரு நாள் இந்திய கிரிக்கெட் அணியையும் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜடேஜாவை போன்ற இளம் வீரர்கள் கேப்டனாக இருப்பது சென்னை அணிக்கு கூடுதல் பலம் தான், சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு ஜடேஜாவின் துடிப்பான கேப்டன்சி மூலம் புதிய உத்வேகம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.