காதல் கல்யாணம் பண்ணா அனாதையா தான் இருக்கனும்.. சாதிவெறின்னே வெச்சுக்கோங்க - கே.கே.சி பாலு!

Tamil nadu Erode
By Vinothini Nov 17, 2023 04:59 AM GMT
Report

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொருளாளர் கே.கே.சி பாலு சாதி பற்றி பேசியுள்ளார். n

உறுதிமொழி

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 60 வயது வரையிலான 500க்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் இணைந்து வள்ளி கும்மியாட்டம் ஆடினர். இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

kkc-balu-interview-about-caste

அப்பொழுது அங்கு நடனமாட வந்த பெண்களிடம் தங்களது சமூகத்தை சேர்ந்த மணமகனையே தாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என அவர் உறுதிமொழி எடுக்க வைத்தார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக இல்லையென்றால் அதிமுக ஜெயிக்கவே முடியாது; நான் ஏன் தூது..? ஓபிஎஸ் திட்டவட்டம்!

பாஜக இல்லையென்றால் அதிமுக ஜெயிக்கவே முடியாது; நான் ஏன் தூது..? ஓபிஎஸ் திட்டவட்டம்!

கே.கே.சி பாலு

இந்நிலையில், இந்த உறுதிமொழி குறித்து கே.கே.சி பாலு அளித்த பேட்டியில், "எங்க சாதி ஆண்கள், பெரும்பாலும் வேற சாதியில திருமணம் பண்றது கிடையாது. அப்படியே பண்ணாலும் 40 வயசு வரைக்கும் பொண்ணே கிடைக்காம இருந்தாத்தான், சாதி மாறி திருமணம் செய்துக்கிறாங்க. இப்போல்லாம், திருமணத்துக்கு எங்க சாதியில பொண்ணே கிடைக்குறதில்ல.

kkc-balu-interview-about-caste

பத்துக்கு ஏழு பெண்கள் அப்படின்னுதான் இருக்காங்க. பெண் குழந்தைங்க பிறப்பு விகிதமும் குறைஞ்சுட்டு வருது. வேற சாதியில திருமணம் பண்ணிக்கிட்டா, அங்கேயும் திருமணத்துக்கு பொண்ணு பற்றாக்குறை ஏற்படும். அதனாலதான், வள்ளி கும்மி ஆட்டத்துல பெண்கள்கிட்டே சத்தியம் வாங்கினேன்.

திருமணத்துக்கு பெத்தவங்களோட சம்மதம்தான் முக்கியம். அவங்க சம்மதத்தோட கவுண்ட வீட்டுப் பசங்களை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்றேன். பெண்கள் முடிவெடுக்க முடியாம தவறிப்போய்டுறாங்க.

காதல் கல்யாணம் எல்லாம் பண்ணிக்கிட்டா அனாதையாத்தான் இருக்கணும். அதுக்குதான், முன்கூட்டியே சத்தியம் வாங்குறோம். இப்படி பண்றது சாதிவெறியா தெரிஞ்சா தெரிஞ்சா தெரிஞ்சுட்டுப் போகட்டும். என்னை சாதிவெறியன்னே வெச்சுக்கோங்க. அதுப்பத்தி எனக்கு கவலை இல்லை" என்று பேசியுள்ளார்.