போரால் பாதிக்கப்பட்ட கல்வி; பூமிக்கு அடியில் பதுங்கு குழி பள்ளி - மாணவர்கள் உற்சாகம்!
உக்ரைனின் கார்கிவ் நகரில் பதுங்கு குழி பள்ளி (பங்கர் பள்ளி) உருவாக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய போர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல காலமாக மோதல் இருந்து வந்த நிலையில், திடீரென முழு வீச்சில் போர் ஆரம்பித்தது.
இந்த போரில் உக்ரைனின் பல முக்கிய இடங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. மேலும், இந்த போரால் பள்ளி மாணவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் பதுங்கு குழி பள்ளி (பங்கர் பள்ளி) உருவாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் உற்சாகம்
இந்த பதுங்கு குழி பள்ளி ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பூமிக்கு அடியில் 6 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பல ஆண்டுகள் கழித்து பள்ளிக்கு வந்த குழந்தைகள் தங்களது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து உற்சாகமடைந்தனர். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ், ரஷ்ய எல்லைக்கு அருகில் இருக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.