இளம்பெண்கள் கடத்தல்; ஒரே அறையில் மாதக்கணக்கில் பாலியல் சித்ரவதை - கொடூரம்!
இளம்பெண்களை கடத்தி 9 பேர் கொண்ட கும்பல் பாலியல் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்
பீகார் மாநிலம் முஸாபர்பூரில் உள்ள ஒரு கும்பல் பெண்களை குறிவைத்து தங்களின் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி வரவழைத்துள்ளனர். பின்னர் அவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.
அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்த ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அந்த இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்களை மீட்டனர். ஆனால், குற்றத்தில் ஈடுபட்ட 9 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
வழக்குப்பதிவு
இந்நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த வாக்கு மூலத்தில், "வேலை தருவதாக கூறிய அந்த கும்பலை நம்பி சென்றேன்.
அப்போது என்னை ஒரு அறையில் காத்திருக்க கூறினார்கள். அந்த அறையில் வேறு பல இளம்பெண்களும் இருந்தனர். பின்னர் எங்களை அடைத்து வைத்து தினமும் அடித்து பாலியல் சித்ரவதை செய்தனர். அதில் உருவான கருவையும் கலைத்தனர்" என்று தெரிவித்துள்ளார்.