மெஹந்தி விழாவில் மகிழ்ச்சியாக நடனமாடிய மணப்பெண் - இறுதியில் நேர்ந்த சோகம்!

India Marriage Uttarakhand Death
By Jiyath Jun 18, 2024 08:17 AM GMT
Report

திருமண நிகழ்ச்சியின் போது மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மணப்பெண் 

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் நகரில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் ஸ்ரேயா ஜெயின் (28) என்ற பெண்ணின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் அவரது உறவினர்கள் கலந்து கொண்டனர்.

மெஹந்தி விழாவில் மகிழ்ச்சியாக நடனமாடிய மணப்பெண் - இறுதியில் நேர்ந்த சோகம்! | Bride Dies While Dancing At Wedding Function

அப்போது மெஹந்தி விழாவில் நடனமாடிய மணமகள் திடீரென சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரேயா ஜெயின் டெல்லியில் உள்ள துவாரகாவில் ஸ்ரேயா ஸ்பெஷலிஸ்ட் கிளீனிக் ஒன்றை நடத்தி வருகிறார்.

75 ஆண்டுகால விஐபி சலுகை ரத்து - அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!

75 ஆண்டுகால விஐபி சலுகை ரத்து - அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!

நுரையீரல் சிக்கல்

மேலும், திருமணத்தில் ஸ்ரேயா ஜெயின் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அவரது தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிம்டால் இன்ஸ்பெக்டர் ஜக்தீப் நேகி கூறுகையில், "மெஹந்தி விழாவில் நடனமாடும்போது மணப்பெண் ஸ்ரேயா சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

மெஹந்தி விழாவில் மகிழ்ச்சியாக நடனமாடிய மணப்பெண் - இறுதியில் நேர்ந்த சோகம்! | Bride Dies While Dancing At Wedding Function

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இருதய நுரையீரல் சிக்கல்களால் இறந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தினர். அந்த பெண்ணின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கைகளை கோரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.