சிறுவர்களின் சிறுநீரை உணவில் கலந்து சாப்பிடும் மக்கள் - எங்கே தெரியுமா?
சீன மக்களிடையே விசித்திரமான உணவு பழக்கம் ஒன்று உள்ளது.
உணவு பழக்கம்
சீனாவில் பல வினோத பழக்க வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. அங்கு மார்க்கெட்டுகளில் கிடைக்கும் தவளை, பல்லி, பாம்பு உள்ளிட்டவற்றையும் வாங்கி சென்று வீட்டில் வேகவைத்து சாப்பிட்டுவிடுவார்கள்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில், குடும்பமாக அமர்ந்து டைனிங் டேபிளில் சாப்பிட பெண் உள்பட பலரும் தயாராக உள்ளனர்.
உணவில் சிறுநீர்
அப்போது ஒரு சிறு குழந்தை அவர்கள் சாப்பிடும் உணவின் மீது சிறு நீர் கழிக்கிறது. இப்படி சாப்பிடும் உணவின் மீது குழந்தையை சிறு நீர் கழிக்க வைத்து சாப்பிடுவதாக பெண் ஒருவர் கூறுகிறார். இதை தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு உட்பட்ட குழந்தையின் சிறுநீருக்கு சூப்பர் பவர் உள்ளதாக அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் சிறுவர்களின் சிறுநீர் குணப்படுத்தும்.
துரதிர்ஷ்டம், கெட்ட ஆவிகள் ஆகியவற்றை விரட்டும் சக்தி உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், சிறுநீரில் வேகவைத்த முட்டைகளையும் சாப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.