மியூசிக் கேட்ட 15 வயது சிறுவன் - விதிக்கப்பட்ட மரணதண்டனை!
மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
மரணதண்டனை
ஈரான் நாட்டில் மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது என்று கூறி, சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது.
அதில், ஈரான் தொழுகை நேரத்தில் 15 வயது சிறுவன் மியூசிக் கேட்டதற்காக மரணதண்டனை. ஷரியா சட்டம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பலர் கமெண்டுகளை குவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவலின் உண்மை தன்மையை ஆராய்ந்ததில், இது கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த செய்தி என்றும், ஈரான் நாட்டிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்தது.
Fact Check
வடக்கே சிரியா எல்லையை ஒட்டியுள்ள மொசூல் நகரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு 2014 முதல் 2016 வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அப்போது, அங்குள்ள Nabi Younis மார்க்கெட் பகுதியில் கடை நடத்திய ஒருவரின் மகன் (Ayham Hussein) சிடி பிளேயரில் பாப் இசை கேட்டுள்ளான்.
ஈரான்
— E Chidambaram. (@JaiRam92739628) July 17, 2024
தொழுகை நேரத்தில் 15 வயது சிறுவன் மியூசிக் கேட்டதற்காக மரணதண்டனை
ஷரியா சட்டம் pic.twitter.com/b6bodIfJMi
இதனால், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பொது மக்கள் முன்பாக, அந்த 15 வயது சிறுவனின் தலையை வெட்டி, மரண தண்டனையை நிறைவேற்றினர்.
எனவே, 2016ம் ஆண்டு ஈராக் நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் நிகழ்த்திய கொலைக் குற்றம் தொடர்பான புகைப்படம் ஒன்றை எடுத்து, தற்போது ஈரானில் நடக்கும் அட்டூழியம் என்று கூறி வதந்தி பரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.