அயோத்தியில் அசைவத்துக்கு அனுமதி? போட்டிப்போடும் கேஎஃப்சி, டொமினோஸ்!
அயோத்தி எல்லைக்குள் அசைவத்துக்கு அனுமதி உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோவில் இந்தியாவின் பிரதான ஆன்மிக யாத்திரை தலமாக உருவெடுத்துள்ளது. பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மேலும், சர்வதேச பயணிகள் இடம்பெறுவார்கள் என்பதாலும், இதனால், அங்கு ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அதிகரித்துள்ளன. எனவே, தற்போது அயோத்தி எல்லைக்குள் அசைவத்துக்கு அனுமதி உண்டா என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது.
அசைவத்திற்கு அனுமதி?
ஆனால் அயோத்தி நகர நிர்வாகம் ராமர் கோயிலைச் சுற்றி 15 கிமீ வரம்புக்குள் அசைவம் மற்றும் மதுவுக்கு அறவே அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சைவம் மட்டுமே பரிமாறுவோம் என்ற நிபந்தனைக்கு உட்பட்டதில், டொமினோஸ் உணவகம் அயோத்தி ராமர் கோயிலில் இருந்து 1 கிமீ எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிரபல கேஎஃப்சி உணவகம் லக்னோ சாலைக்கு விரட்டப்பட்டுள்ளது. கேஎஃப்சி உணவகமும் சைவம் மட்டுமே பரிமாறுவோம் என்ற நிபந்தனைக்கு உட்பட்டால், அயோத்தி எல்லைக்குள் அனுமதிக்கத் தயார் என கூறப்பட்டுள்ளது.
அயோத்திக்கு வாரந்தோறும் 10 முதல் 12 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.