பர்கரில் கையுறை.. KFC கொடுத்த ஷாக் - வைரலாகும் வீடியோ!
கேஎஃப்சியில் சாப்பிட்ட பர்கரில் கையுறை இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கேஎஃப்சி
விழுப்புரம், திண்டிவனத்தை சேர்ந்தவர் டேவிட் (29). இவர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவரும், இவரது நண்பரும் கடந்த 5-ம் தேதி மாலை ஆரோவில் அருகே உள்ள பிரபல தனியார் உணவுக்கடையான கேஎஃப்சியில் பர்கர் வாங்கி உள்ளனர்.
அதை சாப்பிடும் போது அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது. அதை எடுத்து பார்த்தபோது பிளாஸ்டிக் கையுறை என தெரிந்தது. அதை உடனடியாக ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு பர்கர் தருவதாக கூறினர்.
பர்கரில் கையுறை
அதற்கு டேவிட், வேண்டாம் என தெரிவித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு வீடியோ எடுத்து அனுப்புவதாக தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகந்தன், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன் ஆகியோரிடம் கேட்டபோது, "இது குறித்த புகார் எதுவும் பெறப்படவில்லை. இதே கடையில் முடி இருந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெறப்பட்ட புகாரின் பேரில் அக்கடையில் ஆய்வு செய்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளோம்" என்றனர்.