திருவிழாவில் பயங்கர தீ விபத்து; 10 பேர் கவலைக்கிடம்; 154 பேர் படுகாயம்

Kerala Festival Fire
By Sumathi Oct 29, 2024 06:14 AM GMT
Report

தீ விபத்தில் சிக்கிய 10 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்து

கேரளா, நீலேஸ்வரில் உள்ள அஞ்சுதம்பலம் வீரரேர்கவு கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நள்ளிரவில் வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன.

kerala fire accident

அப்போது கொளுத்தப்பட்ட பட்டாசுகளின் தீப்பொறி, குடோன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டைகளின் மீது விழுந்து எரிந்தது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- தொழிலாளர்கள் உடல் கருகி பலி!

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- தொழிலாளர்கள் உடல் கருகி பலி!

10 பேர் கவலைக்கிடம்

பக்தர்களும் பொதுமக்களும் வெடித்துச் சிதறிய பட்டாசுகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டு அலறித் துடித்தனர். இந்த சம்பவத்தில் 154 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

திருவிழாவில் பயங்கர தீ விபத்து; 10 பேர் கவலைக்கிடம்; 154 பேர் படுகாயம் | Kerala Temple Fire Accident 10 Serious 154 Injured

இதுகுறித்து காசர்கோடு மாவட்ட ஆட்சியர் இன்பசேகர் கூறுகையில், பட்டாசுகள் அனுமதியின்றி குடோனில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த விபத்து தொடர்பாக கோவில் நிர்வாக குழு தலைவர், செயலாளரை காவலில் வைத்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.