விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 29 பேர் உயிரிழப்பு!

Turkey Fire Death
By Sumathi Apr 03, 2024 05:08 AM GMT
Report

விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

விடுதியில்  தீ

துருக்கியின் பிரபல நகரம் இஸ்தான்புல். இதன் அருகில் உள்ள பெசிக்டஸ் நகரில் பாரம்பரிய சின்னங்கள், பண்பாட்டு மையங்கள், சர்வதேச பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவை அமைந்துள்ளன.

turkey fire accident

அதில் 16 மாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் இரவுநேர மதுபான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு புனரமைப்பு பணிகளுக்காக விடுதி மூடப்பட்டிருந்த நிலையில் அங்கு 16 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து, 40 பேர் படுகாயம் - 7 பேர் பலி!

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து, 40 பேர் படுகாயம் - 7 பேர் பலி!

29 பேர் பலி

அப்போது தீடீரென தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த மது பாட்டில்களில் பற்றியதால் மேலும் மளமளவான பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர்.

istanbul nightclub

தொடர்ந்து, பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, 7 பேர் தீவிர தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.