மகளை மீட்க போராடும் தாய்; கேரள நர்ஸுக்கு மரண தண்டனை - ஏமன் அதிபர் உறுதி!

Attempted Murder Kerala Yemen Crime
By Sumathi Dec 31, 2024 11:03 AM GMT
Report

கேரள செவிலியர் பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மரண தண்டனை

கேரளா, பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமனில் செவிலியாகப் பணி புரிந்து வந்தார். அப்போது அவர் தலோல் அப்டோ மஹ்தி என்பவரிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்க முயற்சித்துள்ளார்.

nurse priya

பலமுறை முயற்சித்தும் அது முடியாததால் ஒருமுறை அவருக்கு ஊசி மூலம் மயக்க மருந்தை செலுத்தியுள்ளார். இதில் அந்த நபர் உயிரிழந்துவிட்டார். இதனால் 2017ல் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து தன்னை மஹ்தி துன்புறுத்தியதாகவும்,

கொத்து கொத்தாக முடி கொட்டுதா; மாத்திரை சாப்பிடுறீங்களா? குழந்தைக்கு இந்த பிரச்சனை வரும்!

கொத்து கொத்தாக முடி கொட்டுதா; மாத்திரை சாப்பிடுறீங்களா? குழந்தைக்கு இந்த பிரச்சனை வரும்!

அதிபர் உறுதி

பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாகவும் அதனாலேயே அவரிடமிருந்து பாஸ்போர்ட்டை பெற முயற்சித்ததாகவும், ஆனால் அந்த முயற்சி விபரீதமாக முடியும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று விளக்கமளித்திருந்தார்.

இருப்பினும், ஏமன் அரசு அவருக்கு 2018ல் மரண தண்டனை விதித்தது. இதனையடுத்து பிரியாவின் தாயார் ஏமன் சென்று தன் மகளை மீட்டுவர முயற்சித்து வருகிறார். இந்நிலையில், நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிமிஷா பிரியாவை மீட்க குடும்பத்தினர் அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் என்று அறிவோம். அரசாங்கம் இவ்விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.