என்னது ஐஸ்கிரீமில் பிரியாணியா? எல்லை மீறி போறீங்கடா - கதிகலங்க வைத்த வீடியோ!
'ஐஸ்கிரீம்' பிரியாணி குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'ஐஸ்கிரீம்' பிரியாணி
இந்திய உணவுகளில் பெரும்பாலானோருக்கு பிடித்த உணவில் பிரியாணி டாப்பில் உள்ளது. அதில், மட்டன், சிக்கன், இறால், மீன், வெஜிடபிள், என பலவிதம் உள்ளது.
அந்த வகையில் ஐஸ்கிரீம் பிரியாணி உணவு என ஒன்று அறிமுகமாகி பிரியாணி பிரியர்களை மிரள வைத்துள்ளது. மும்பையை சேர்ந்தவர் ஹீனா. சமையற்கலை நிபுணரான இவர் சொந்தமாக பேக்கரி ஒன்றை நிறுவி நடத்தி வருகிறார்.
ஷாக் வீடியோ
இணையத்தில் தன்னுடைய உணவு குறிப்புகளை வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வரிசையில், 'ஐஸ்கிரீம்' பிரியாணி தயாரிப்பு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
2 பெரிய பிரியாணி அண்டாக்களுக்கு அருகே நின்று அதில் ஐஸ்கிரீமை கலந்து 'ஐஸ்கிரீம்' பிரியாணி தயாரிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.