மாமியார் சீக்கிரம் சாகனும் - உண்டியலில் எழுதிப் போட்ட மருமகள்!
மருமகள் ஒருவர் கடவுளிடம் வேண்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் வேண்டுதல்
கர்நாடகா, கட்டரக பகுதியில் பாக்யவந்தி தேவி கோவில் அமைந்துள்ளது. இங்கு எராளமான பக்தர்கள் வருகை புரிந்து, அம்மனை தரிசிப்பது வழக்கம்.
இந்நிலையில், கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் 60 லட்சம் ரூபாய் பணம், 200 கிராம் தங்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக கிடைத்தன.
திகைத்த நிர்வாகிகள்
இதற்கிடையில் ரே ஒரே இருபது ரூபாய் நோட்டை கண்டு கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த ரூபாய் நோட்டில், தனது மாமியார் விரைவில் மரணமடையே வேண்டும் என்று பேனாவால் எழுதுப்பட்டுடிருந்தது.
அந்த பெண்ணின் செயலுக்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அந்த ஒற்றை நோட்டுதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.