கொத்து கொத்தாக முடி கொட்டுதா; மாத்திரை சாப்பிடுறீங்களா? குழந்தைக்கு இந்த பிரச்சனை வரும்!
முடி உதிர்வு குறித்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முடி உதிர்வு
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் தொடங்கி அனைத்து வயது தரப்பினரிடையேயும் முடி கொட்டுதல் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதனால் பலர் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து ஸ்பெயினில் உள்ள நவர்ரா பார்மகோவிஜிலன்ஸ் மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், கடந்த ஆண்டு ஸ்பெயின் முழுவதும் உள்ள 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழந்தைகளிடையே வேர்வூல்ஃப் சிண்ட்ரோம் என்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வேர்வூல்ஃப் சிண்ட்ரோம் என்பது உடலின் அசாதாரண இடங்களிலும் அதிகப்படியான முடி வளர்வது.
வேர்வூல்ஃப் சிண்ட்ரோம்
முகம், கைகள் மற்றும் உள்ளிட்ட உடல் பாகங்களில் இதனால் 5 செமீ வரை முடி வளரும். முடி உதிர்வதை தடுக்கும் மருந்தை எடுத்துக் கொண்டவர்களின் குழந்தைகளுக்கே இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. குறிப்பாக மினாக்ஸ் என்ற கெமிக்கலை கொண்ட மருந்தை பயன்படுத்தியவர்களில் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மினாக்ஸ் என்பது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்து. வயதானோருக்கு முடி உதிர்வதை தடுக்க இந்த மருந்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.