உருவாகிறது GEN-BETA தலைமுறை.. இவங்கலாம் யாருடைய வாரிசுகள் என்று தெரியுமா?
GEN-BETA தலைமுறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
GEN-BETA
90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என்று வலம் வரும் இந்த வார்த்தைகள் ஒவ்வொரு ஜென்ரேஷன்களை குறிக்கிறது. தற்போது ஜென் Z தலைமுறை டிரெண்டிங்கில் உள்ள நிலையில் 2025 ஜனவரி 1 முதல் Gen-Beta என்ற புதிய தலைமுறை உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
1998 முதல் 1996 வரை மில்லினியல்கள் என்றும், 1996 முதல் 2010 ஆம் வரை பிறந்தவர்கள் Gen Z என்றும் 2010 முதல் 2024 க்கு இடையில் பிறந்தவர்கள் Gen Alpha ஆல்பா என்றும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் புத்தாண்டு முதல் லிஸ்டில் பீட்டா தலைமுறை சேர உள்ளது. வருகின்ற 2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் ஜென் பீட்டா என்று அழைக்கப்படுவர். இந்த தலைமுறை குழந்தைகள் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Z தலைமுறைகளின் வாரிசுகளாக இருப்பர் என்று கணிக்கப்படுகிறது.
தலைமுறை
வரும் 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA-ஆக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி 2025ம் ஆண்டு பிறக்கும்
பீட்டா குழந்தைகளின் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக AI தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை, பீட்டாவினரின் அன்றாட வாழ்க்கை, கல்வி மற்றும் பணியிடங்களில் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் முழுமையான ஆதிக்கம் செலுத்தும்.
தொழில்நுட்பம் அவர்களின் விரல் நுனியில் இருக்கும். அதே வேளையில், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் உலகளாவிய மக்கள்தொகை மாற்றங்கள் போன்ற பல சவால்களைக் கொண்ட ஒரு சமூக வாழ்க்கையை பீட்டா தலைமுறையினர் எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.