நீங்க எதிர்பார்த்தது கிடையாது.. 150 மில்லியன் மக்கள் பெயர் இதுதான் - அமெரிக்காவில் முதலிடமாம்!
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு அதிகம் வைக்கப்பட்ட மிகவும் பிரபலமான பெயர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அமெரிக்கா
அமெரிக்காவில் கடந்த ஆண்டு புதியதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்பட்டப் பெயர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், முகமது என்ற பெயர் டாப் 10க்குள் வந்துள்ளது.இது அமெரிக்காவின் மக்கள் தொகை மாற்றம், கலாச்சார மாற்றத்தை உணர்த்தும் விதமாக உள்ளது.
முகமது(முஹம்மது) என்ற பெயர் அரபு மொழியை சேர்ந்த பெயர் ஆகும். இந்த பெயர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வட ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 60% சதவீத மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால் அமெரிக்காவில் முகமது அல்லது முஹம்மது என்பது உலகின் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாக உள்ளது .அதிலும் சுமார் 150 மில்லியன் மக்கள் இந்த பெயரைக் கொண்டுள்ளனர் . முகமது என்ற பெயர் டாப் 10க்குள் வந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
டாப் பெயர்
மேலும் 2024 ஆண்டின் அறிக்கையில் டாப் 5க்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் 2017 ஆம் ஆண்டு முதல் சீனாவின் சின்ஜியாங் பகுதியில் பிறந்த குழந்தைகளுக்கு முகமது என்ற பெயர் வைக்கத் தடை உள்ளது.
குறிப்பாகப் பாகிஸ்தானில் உள்ள அஹ்மதி சமூகத்தினருக்கும் முகமது என்ற பெயர் வைக்கத் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக அளவில் முகமது என்ற பெயர் தான் அதிக அளவில் வைக்கப்பட்டு முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.