ரூ.12 கோடி மதிப்பு லாட்டரியை விற்ற மனைவி; கணவருக்கு 2வது பரிசு - அடித்த பம்பர் பரிசு!
கணவன் - மனைவி விற்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசும் இரண்டாவது பரிசும் கிடைத்துள்ளது.
பூஜா பம்பர்
கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. வாரத்திற்கு ஏழு நாட்களும் அங்கு லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. அதிகப்பட்சமாக ரூ.1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படும் ஓணம் பம்பரில் ரூ.25 கோடி பரிசுத்தொகையில்
தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு பரிசு அடித்தது. அதன்பிறகு ரூ. 12 கோடி பரிசுத்தொகை கொண்ட பூஜா பம்பர் விடப்பட்டது. அதன் குலுக்கல் நேற்று நடைபெற்றது.
அடித்த ஜாக்பாட்
அதில், காசர்கோட்டில் உள்ள எஸ். 1413 என்ற ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்குத்தான் முதல் பரிசு கிடைத்தது. மேலும், பாரத் லாட்டரி ஏஜென்சி என்ற பெயரில் மரிய குட்டி ஜோ (56) மற்றும் ஜோஜோ ஜோஷப் (57) ஆகிய இருவரும் தனித்தனியாக லாட்டரியை விற்பனை செய்து வந்துள்ளனர்.
தொடர்ந்து, இந்த குலுக்கலில் முதல் பரிசு மனைவி விற்ற லாட்டரிக்கும் இரண்டாவது பரிசு கணவரான ஜோஜோ ஜோஷப் விற்ற லாட்டரிக்கும் விழுந்துள்ளது. அதன் மூலம், மனைவிக்கு ரூ.12 கோடியும், கணவருக்கு ரூ.10 லட்சமும் கிடைக்கும். 2018 ஆம் ஆண்டு முதல் லாட்டரி விற்பனை தொழிலில் ஈடுபட்டு வரும்
இந்த தம்பதிக்கு விற்பனை செய்து லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகை பரிசு அடிப்பது இதுதான் முதல் முறையாம். மஜீரபல்லா என்ற இடத்தில் சிறிய லாட்டரி கடையை வைத்துள்ளனர். அவரது கணவர் டாடா நானோ காரில் வைத்து லாட்டரியை விற்பனை செய்து வருகிறார்.