கட்டிட தொழிலாளிக்கு அடித்த லக், ரூ.1 கோடி லாட்டரி பரிசு - 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு!
விட மாநில கட்டிட தொழிலாளிக்கு ரூ.1 கோடி லாட்டரி பரிசு கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டிட தொழிலாளி
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிர்ஷூ ராபா, இவர் கடந்த சில ஆண்டுகளாக திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்பானூரில் உள்ள ஒரு லாட்டரி கடையில் 5 சீட்டுகளை வாங்கினார்.
கடந்த புதன்கிழமை இவரது லாட்டரி சீட்டுக்கு ரூ. 1கோடி பரிசு விழுந்ததது. இந்த இன்ப அதிர்ச்சியால் இவருக்கு காய்ச்சல் வந்துவிட்டது.
போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில், இது குறித்த தகவல் அங்கிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே பரவியது. அதனால் அவர் சில மணிநேரத்தில் நம்மை கொலை செய்து விட்டு லாட்டரி சீட்டை பறித்துக்கொண்டு சென்று விடுவார்களோ என்று பயத்தில் திருவனந்தபுரம் தம்பானூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து விவரத்தை கூறினார்.
போலீசார் வங்கி அதிகாரிகளை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களிடம் லாட்டரி சீட்டை ஒப்படைக்க வைத்தனர். மேலும், போலீசாரிடம் அவர் ஊருக்கு செல்லும் வரை தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதனால் போலீசார் அவரை ரகசியமாக ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர். பணம் கிடைத்து சொந்த ஊருக்கு செல்லும் வரை அவரை தங்களது கண்காணிப்பில் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.