குப்பையில் கிடந்த லாட்டரி; ஆட்டோ டிரைவருக்கு அடித்த அதிர்ஷ்டம் - ஒரே நாளில் கோடீஸ்வரன்!
பரிசு விழுகாது என நினைத்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் குப்பை தொட்டியில் வீசிய லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்
கேரளா மாநிலம் கோட்டையை மாவட்டம் மூலவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (53). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் கேரள அரசின் 50-50 என்ற லாட்டரி குலுக்கல் பரிசு திட்டத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
இதற்கான பரிசு தொகை ரூ.1 கோடியாகும். இதனையடுத்து கடந்த 18ம் தேதி லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு பெற்றவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் எப்படியும் தனக்கு லாட்டரியில் பரிசு தொகை விழுக்காது என்று எண்ணிய சுன்னி குமார், அந்த லாட்டரியை குப்பை தொட்டியில் வீசியுள்ளார். ஆனாலும் லாட்டரி சீட்டுக்கு பரிசு தொகை கிடைத்து விடுமோ என்று எண்ணிய சுனில், குப்பைத் தொட்டியில் வீசிய லாட்டரி சீட்டை தேடி எடுத்துள்ளார்.
ஒரு கோடி பரிசு
பிறகு அந்த லாட்டரி சீட்டின் நம்பருக்கு பரிசுத்தொகை விழுந்துள்ளதா என பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த நம்பருக்கு ரூ. 1 கோடி பரிசு விழுந்துள்ளது. இதனையறிந்த சுனில்குமார் மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடினார்.
பின்னர் அதனை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது அவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து சுனில்குமார் கூறியதாவது "இந்த ரூ.1 கோடியை வைத்து அடமானம் வைத்த வீட்டை மீட்டு, புதிய வீடு கட்ட உள்ளதாகவும், வாங்கிய கடன் அனைத்தையும் அடைக்க உள்ளதாகவும், தனக்கு கடவுள் பரிசை வழங்கியுள்ளது என்றும் மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளார்.