11 துப்புரவு பணியாளர்களுக்கு லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் - ரூ.250 செலவில் கோடிகளில் பம்பர் பரிசு!
கேரள மாநிலத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு லாட்டரியில் கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
கேரளா லாட்டரி
கேரளா மாநிலத்தில் அரசு சார்பாக லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏராளமானவர்கள் தினமும் பண பரிசுகளை வென்று வருகிறார்கள். மற்ற தினங்களில் எல்லாம் சிறு சிறு தொகையாகவே பரிசுகளில் இருக்கும். ஆனால் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பரிசு சீட்டுகளுக்கு கொடிகள்,லட்சங்களில் வழங்கப்படும். இதில் வெல்லுபவர்கள் பெரும் பணக்காரர்களாக மாறி விடுவார்கள்.
இந்நிலையில் பருவமழைக்கால லாட்டரி விற்பனை நடந்து வந்தது. அதற்கு பரிசு 10 கோடி என அறிவிக்கப்பட்டது. இரண்டாம் பரிசும் கோடிகளில் தான். இதன் குலுக்கள் முடிவுகள் நேற்று முன்தினம் 26 ம் தேதி வெளிவந்தது. MB 200261 என்ற கொண்ட சீட்டிற்கு 10 கோடி ரூபாய் முதல் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அதில் வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியாமல் இருந்தது.
பரிசு வென்ற துப்புரவு பணியாளர்கள்
இந்நிலையில் அந்த லாட்டரி சீட்டை மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக இருக்கும் 11 பேர் கொண்ட பெண்கள் இனைந்து ஒன்றாக வாங்கியது தெரிய வந்துள்ளது. லாட்டரி சீட்டை வாங்கிய அன்றைய தினம் லாட்டரி விற்பவர் ஒருவர் வந்து இவர்களிடம் டிக்கெட் விலை 250 ரூபாய் என்று கூறியிருக்கிறார்.
அவ்வளவு பணம் இல்லாததால் 9 பேர் தலா 25 ரூபாயும் ஒருவர் 50 ரூபாயும் போட்டு லாட்டரியை வாங்கியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அதிர்ஷ்ட்டம் அடித்துள்ளது . பம்பர் பரிசை வென்ற அவர்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.