ஜூஸில் விஷம் கலந்து காதலனைக் கொன்ற கொடூரம் - கிரீஷ்மாவுக்கு ஜாமீன்!
காதலனை விஷம் கொடுத்துக் கொலை செய்த வழக்கில் கிரீஷ்மாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கொலை குற்றம்
கேரளா, பாறசாலையைச் சேர்ந்த இளைஞரான ஷரோன் ராஜ், கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் ஷாரோன் ராஜ் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இது தொடர்பான புகாரில் போலீசார் நடத்திய விசாரணையில், கிரீஷ்மாவே திட்டமிட்டு அவரை கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில், இந்த கொலை திட்டம் கிரீஷ்மாவுன் அம்மாவிற்கு முன்கூட்டியே தெரியும் என்பதும்,
ஜாமீன்
வீட்டில் பார்த்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளவும், முதல் கணவர் இறந்து விடுவார் என ஜோதிடர் கூறியதாலும் பழரசத்தில் நஞ்சு கலந்து கொடுத்துள்ளார் என்பதும் அம்பலமானது.
அதனையடுத்து, கிரீஷ்மா, அவரது தாய், மாமா ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கிரீஷ்மாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இந்த நிகழ்வு தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.