10 தடவைக்கும் மேல்..ஹோட்டலில் ரூம் - காதலனை கொலை செய்த சம்பவத்தில் பகீர் தகவல்!
காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
காதல் விவகாரம்
கேரளா, பாறசாலை முறியன் கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ்(23). இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அப்போது, ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா(22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில், ஷாரோன்ராஜ் தனது நண்பருடன் காதலி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்து திரும்புகையில், வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது நண்பர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொன்று சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜூஸில் விஷம்
அதனையடுத்து இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கிரீஷ்மாவின் குடும்பத்தினர்தான் திட்டமிட்டு அவர்களது மகனை கொன்றுவிட்டதாக போலீஸில் புகாரளித்தனர். மேலும், கிரீஷ்மாவின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்துவிடுவார் எனவும் என கூறப்பட்டதால்,
காதலனை கொன்றுவிட்டு ராணுவ வீரர் ஒருவருக்கு காதலியை திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து ஷாரோன்ராஜின் காதலியை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், நெய்யூர் சிஎஸை கல்லூரியின் விடுதி கழிவறையில் வைத்து குளிர்பானத்தில் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும்
பகீர் தகவல்
10க்கும் மேற்பட்ட டோலோ மாத்திரையை கலந்தும், தொடர்ந்து குழித்துறை பழைய பாலத்தில் வைத்து விஷம் கலந்து கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியின் மேற்பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில்
கடந்த ஜூன்மாதம் 13ஆம் தேதியும் ஜூலை மாதம் 18ஆம் தேதியும் இரண்டு நாட்கள் அறை எடுத்து தங்கியதாகவும் காலையில் வந்து மாலையில் திரும்பி சென்றதாகவும் கிரீஷ்மா தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.