விஷம் கொடுக்கும் முன் காதலனை பாலியல் உறவுக்கு அழைத்த கிரீஷ்மா - பகீர் வாக்குமூலம்
விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை கிரீஷ்மா உடலுறவுக்கு அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காதல் விவகாரம்
கேரளா மாநிலத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஷரோன் ராஜ் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி கிரீஷ்மா குறித்து பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. ஆயுர்வேத மருந்து என கூறி நம்பவைத்து, விஷத்தை தண்ணீரில் கலந்து ஷரோனுக்குக் கொடுத்து கிரீஷ்மா கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வேறொருவருடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டும் கூட, காதலில் இருந்து விலக ஷரோன் மறுத்ததால், கிரீஷ்மா இந்த கொலை திட்டத்தை போட்டதாக தெரியவந்தது. போலீசாரின் தொடர் முயற்சிக்கு பின்னர் கிரீஸ்மா கைது செய்யப்பட்டார்.
குற்றப்பத்திரிக்கை தகவல்
விசாரணையில் இருந்தபோது அங்குள்ள கழிவறையில் இருந்த கிருமிநாசினியைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றிய போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இவரைத் தொடர்ந்து, அவரது தாய் சிந்து, மாமா நிர்மலையும் கைது செய்தனர்.
இதற்கிடையில் குற்றப்பத்திரிக்கையில், கிரீஷ்மாவுக்கும் ஷரோனுக்கும் இடையேயான பாலியல் உறவுகள் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு இருந்துள்ளனர். கிரீஷ்மா ஷரோனை உடலுறவுக்கு அழைத்த அன்றுதான் விஷம் கலந்த கஷாயம் பரிமாறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.