மூக்கை பொத்திக்கொண்டு குளியுங்கள்; அரசு எச்சரிக்கை - என்ன காரணம்?
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை
கார்த்திகை மாதங்களில் சபரி மலை சீசன் தொடங்குவதால் பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. மண்டல பூஜை வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுவரை 22 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகமும், கேரள அரசும் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அரசு எச்சரிக்கை
18,741 காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி, குறிப்பாக 18 ஆம் படிமேல் உள்ள சன்னிதானத்தில் செல்போன் மற்றும் புகைப்படக் கருவிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பம்பை நதியில் குளிக்கும் போது இருவிரலால் மூக்கைப் பொத்திக்கொண்டு குளிக்கும்படி கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவில் நீர்நிலைகள் மூலம் பரவி வரும் மூளையை தின்னும் அமீபா தொற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.