போலீஸ் ஷ்டேஷனில் உடல் சிதறி 9 பேர் பலி - ஒரே வாரத்தில் அடுத்த கொடூரம்!
வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெடிவிபத்து
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் நவ்காம் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். இந்த சம்பவத்தில், 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
9 பேர் பலி
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கையாளும் போது விபத்து நிகழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சில ரசாயனங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. முன்னதாக டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.