ஒரே நேரத்தில் 4 நகரங்கள் டார்கெட் - கார் குண்டு வெடிப்பில் பகீர் தகவல்
4 நகரங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
4 நகரங்கள்
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை மருத்துவர் உமர் நபி என்பவர் முன்னின்று நிகழ்த்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதன் அடிப்படையில், வெடித்து சிதறிய காரில் சிக்கி இருந்த நபரின் சடலம் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் முடிவில் உமர் நபியின் தாயாருடன் அந்த டிஎன்ஏ ஒத்துப்போனது.
பகீர் தகவல்
மேலும், நாட்டின் முக்கிய 4 நகரங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. அதாவது, 2 குழுக்களாக பிரிந்து 4 நகரங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி உள்ளனர்.

குறிப்பாக, வரும் 25 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் கொடி ஏற்ற நிகழ்ச்சியின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் துருக்கியில் இருந்து இதற்கான சதி திட்டம் தீட்டப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. உமர் நபியின் பெயர், உகாஸா என்ற புனைப்பெயரில் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது.