தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பல் - குண்டுவெடிப்பு சாரணையில் திடுக்
குண்டுவெடிப்பை நிகழ்த்திய சதிக்காரர்கள் தீபாவளி பண்டிகைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குண்டுவெடிப்பு
டெல்லி, செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் அனைவரும் நன்கு படித்த டாக்டர்கள் என தெரியவந்துள்ளது.

டாக்டர் போன்ற பெரிய பதவிகளில் இருப்பவர்கள் மீது விழாது என்பதால், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்களை மூளைச்சலவை செய்திருப்பதும் அம்பலமாகியுள்ளது. இதுவரை, 6 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 பேர் கைது
முக்கிய குற்றவாளியாக கருதப்படும், புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் இடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி தாக்குதல் திட்டம் இருப்பதாகவும்,

அதன் ஒரு பகுதியாக செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியை நோட்டமிட்டு வந்ததாக கூறியுள்ளனர். மேலும், தீபாவளிக்கு மக்கள் நெரிசலான இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும்,
ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை என்றும் முஸம்மில் போலீசாரிடம் கூறியதா தகவல் வெளியாகியுள்ளது.