முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - பின்னணி என்ன?
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
ஷேக் ஹசீனா
வங்கதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடந்த தொடர் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 1,400க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை அடக்குவதற்கு பயங்கரமான ஆயுதங்களை அன்றைய பிரதமர் ஷேக் ஹசீனா பயன்படுத்த உத்தரவிட்டதாகவும், அதனாலே இந்த மரணங்கள் நடந்ததாகவும் வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மரண தண்டனை
அதன்படி, அன்றைய பிரதமர் ஷேக் ஹசீனா, காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் மற்றும் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமல் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஷேக் ஹசீனா, போராட்டக்காரர்களை ஒடுக்க ஆயுதங்களை பயன்படுத்தியதும்,
ஹெலிகாப்டர், ட்ரோன் ஆகியவற்றின் மூலம் போராட்டக்காரர்களை ஒடுக்கியதும் உறுதி செய்யப்படுகிறது எனக் கூறி அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.