கடவுளை சந்தித்த போப்; மோடி-போப் கிண்டலுக்கு காங்கிரஸ் மன்னிப்பு!
மோடி மற்றும் போப்பை வைத்து வெளியிட்ட பதிவுக்கு மன்னிப்பு கோரியுள்ளது காங்கிரஸ்.
ஜி7 உச்சி மாநாடு
ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இரு தினங்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். மாநாட்டுக்கு மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இத்தாலி சென்றார்.
மாநாட்டில் வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவரை கட்டி தழுவி உரையாடினார். இந்நிலையில், பிரதமர் மோடியும், போப்பும் உள்ள படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து "இறுதியாக, போப்பிற்கு கடவுளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது!" என்று கேரளா காங்கிரஸ் பதிவு செய்தது.
இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதும் அப்பதிவு நீக்கப்பட்டது.
பாஜக கண்டனம்
இது குறித்து கேரள பாஜக தலைவர் கே சுரேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், "தீவிர இஸ்லாமியவாதிகள் அல்லது நகர்ப்புற நக்சல்களால் நடத்தப்படும் @INCIndia கேரளா 'X' கைப்பிடி, தேசியவாத தலைவர்களுக்கு எதிராக இழிவான மற்றும் அவமானகரமான உள்ளடக்கத்தை தொடர்ந்து வெளியிடுகிறது. இப்போது அது மரியாதைக்குரிய போப்பை கேலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ சமூகம்." கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, வயநாடு எம்பி ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் போன்ற காங்கிரஸ் பிரமுகர்கள் இதுபோன்ற பேச்சுகளுக்கு ஒப்புதல் அளிக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பாஜக ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, மற்ற மதங்களை இழிவுபடுத்தும் வரலாறு காங்கிரஸுக்கு உள்ளது. கத்தோலிக்கரான முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினார். "இந்துக்களை கேலி செய்து, அவர்களின் நம்பிக்கையை கேலி செய்துவிட்டு, காங்கிரசில் உள்ள இஸ்லாமிய-மார்க்சிஸ்ட் கூட்டு, தற்போது கிறிஸ்தவர்களை அவமதிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
After mocking the Hindus and deriding their faith, the Islamist-Marxist nexus in the Congress has now come down to insulting the Christians. This, when Sonia Gandhi, the longest serving Congress President, herself is a practising Catholic. She must apologise to the believers… pic.twitter.com/rPNfvNmzJi
— Amit Malviya (@amitmalviya) June 16, 2024
இது, நீண்ட காலம் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் போது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் பதிலடி
இதற்குப் பதிலளித்த கேரளா காங்கிரஸ், கடவுளைப் பற்றி கேலி செய்வது மதங்களுக்கு எதிரானது அல்ல என்று போப் பிரான்சிஸ் கூறியதை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டது.
ഒരു മതത്തെയും മതപുരോഹിതന്മാരെയും ആരാധനാമൂർത്തികളെയും അപമാനിക്കുകയും അവഹേളിക്കുകയും ചെയ്യുന്നത് ഇന്ത്യൻ നാഷണൽ കോൺഗ്രസിന്റെ പാരമ്പര്യമല്ലെന്ന് ഈ നാട്ടിലെ ജനങ്ങൾക്ക് മുഴുവനും അറിയാം. എല്ലാ മതങ്ങളെയും വിശ്വാസങ്ങളെയും ചേർത്ത് പിടിച്ച് സൗഹാർദ്ദപരമായ അന്തരീക്ഷത്തിൽ ജനങ്ങളെ മുന്നോട്ടു… pic.twitter.com/Jg7HBh9BMw
— Congress Kerala (@INCKerala) June 16, 2024
"ஒரு பார்வையாளரின் உதடுகளிலிருந்து கூட புத்திசாலித்தனமான புன்னகையை நீங்கள் வெளிப்படுத்தினால், நீங்கள் கடவுளையும் சிரிக்க வைக்கிறீர்கள். ஜூன் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, நரேந்திர மோடியைச் சந்தித்த அதே நாளில் போப் பிரான்சிஸ் இதைச் சொன்னார்,"
எந்தவொரு மதத்தையும் அல்லது மத பிரமுகர்களையும் அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை இருப்பினும், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் விமர்சனத்தில் இருந்து விலக்கு அளிக்கவில்லை என்று கூறியுள்ளது. “உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கடவுளைப் போலக் கருதும் போப்பை அவமதிக்கும் தொலைதூர எண்ணத்தை எந்த காங்கிரஸ் தொண்டர்களும் ரசிக்க மாட்டார்கள்.
மன்னிப்பு
ஆனால், தன்னை கடவுள் என்று சொல்லிக்கொண்டு இந்த நாட்டின் விசுவாசிகளை அவமதிக்கும் நரேந்திர மோடியை கேலி செய்வதில் காங்கிரஸுக்கு எந்த தயக்கமும் இல்லை” மணிப்பூரில் நடந்த இனக்கலவரத்தின் போது தேவாலயங்கள் எரிக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்கத் தவறிய கிறிஸ்தவ சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், எங்கள் பதிவு கிறிஸ்தவர்களுக்கு ஏதேனும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால் நாங்கள் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என மன்னிப்பு கேட்டுள்ளது கேரளா மாநில காங்கிரஸ்.