மோடியை கண்டுக்காத மெலோனி - முதல் வெளிநாட்டு பயணம்..வரவேற்ககவே ஆள் இல்லை!!
பயணம்
3-வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி கடந்த 9-ஆம் தேதி பதவியேற்று கொண்டார். ஆந்திர பிரதேச முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றவர், வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் பயணமாக அவர் இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளார். ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள அவர் சென்றுள்ளார். இந்நிகழ்வு இத்தாலி நாட்டின் அபுலியா நகரில் நடைபெறுகிறது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் போன்றவர்களுடன் பிரதமர் மோடி மீட்டிங் நடத்தவுள்ளார்.
ஆள் இல்லை..
பிரதமர் மோடி உலக நாடுகளில் அதிக அறிமுகம் பெற்ற ஒரு பிரதமராக கடந்த சில வருடங்களில் வளர்ந்து விட்டார். அவர் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அவரை வரவேற்க, நாட்டின் முக்கிய நிர்வாகிகள் ஏன் சில நேரங்களில் பிரதமர்களே வருவார்கள்.
ஆனால், ஜி7 மாநாட்டிற்காக வந்துள்ள அவரை நேரில் வந்து receive செய்து கொள்ள அரசின் சார்பில் யாரும் வரவில்லை. இந்தியாவை சேர்ந்த தூதரக அதிகாரிகள் மட்டுமே மோடியை வரவேற்றனர்.