ஆணவம் பிடித்த கட்சி...கடவுளால் தண்டிக்கப்பட்டுள்ளது - RSS மூத்த தலைவர் பாஜக மீது விமர்சனம்!!
உண்மையான 'சேவகனுக்கு' கர்வம் இல்லை என்றும், 'கண்ணியத்தை' காத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் RSS தலைவர் மோகன் பகவத் சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு கருத்தை தெரிவித்திருந்தார்.
RSS - பாஜக
மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், RSS - பாஜக இடையே சற்று விரிசல் இருக்கும் வகையில் கருத்துக்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த கடுமையான விமர்சித்து, RSS மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் ஆளும் பாஜகவை "திமிர்த்தனம்" என்றும், எதிர்க்கட்சியான இந்திய கூட்டமைப்பு "ராமருக்கு எதிரானவர்கள்" என்றும் கடுமையாக சாடி பேட்டியளித்திருக்கிறார்.
கடவுளால்...
ஜெய்ப்பூர் அருகே நடைபெற்ற 'ராம்ரத் அயோத்தி யாத்ரா தர்ஷன் பூஜான் சமரோஹ்' நிகழ்ச்சியில் பேசிய RSS அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ் குமார், பெயரைக் குறிப்பிடாமல், தேர்தல் முடிவுகள் அவர்களின் அணுகுமுறையை பிரதிபலிப்பதாகக் கூறினார்.
பக்தி செய்த கட்சியாக இருந்து திமிர்பிடித்த கட்சி மாறிய கட்சி 241 இடங்களில் நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டு நேரடியாக அவர் பாஜகவை விமர்சித்திருக்கிறார். தொடர்ந்து பேசியவர், ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், அவர்கள் ஒன்றாகவே 234 இல் நிறுத்தப்பட்டனர் என்றும் விமர்சித்தார்.
ராமர் பக்தி செய்தவர்கள் படிப்படியாக கர்வமாக மாறினர். அக்கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் கொடுக்க வேண்டிய அதிகாரம் அவர்களின் ஆணவத்தால் கடவுளால் நிறுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.