பாஜகவில் மாறும் தலைமை பொறுப்பு - பரபரப்பு அறிக்கை வெளியிட்ட வானதி
தமிழக பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தலைவர் பதவி
தேசிய பாஜக தலைவரான ஜே.பி.நட்டா மத்திய அமைச்சரவைக்கு வந்துவிட்டார். அவரின் தேசிய தலைவர் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அவருக்கு அடுத்து யார் அந்த பதவிக்கு வருவார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெயர் அடிப்பட்ட நிலையில், அவரும் அமைச்சரவைக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் தான் யார் அடுத்த தலைவர் என்ற குழப்பம் எழுந்துள்ளது. இந்த சூழலில் தான், இது தொடர்பாக தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வானதி பதிவு
அதில், 1951-ல் ஜன சங்கம் தொடங்கப்பட்டது முதல் 1980-ல் அது பாஜகவை மாறியது தொடங்கி இன்று வரை. பாஜகவின் தலைவர் யார் என்பது அவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை யாருக்கும் தெரியாது.
பாஜக தேசியத் தலைவராக இருந்தவர்களின் வாரிசுகள் யாரும் தலைவர் பதவிக்கு வந்ததில்லை. அடுத்த பாஜக தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், காங்கிரஸில் அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு யார் தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். இதுதான் வாரிசு அரசியல். இதைத்தான் பாஜக எதிர்க்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பாஜக தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. pic.twitter.com/wWImOdTIvo
— Vanathi Srinivasan (@VanathiBJP) June 12, 2024