வெளிவரும் உள்கட்சி மோதல்? மேடையிலேயே தமிழிசையை எச்சரித்த அமித் ஷா!
தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவர துவங்கிவிட்டன.
தமிழிசை
ஆளுநராக இருந்த தமிழிசை பதவியை ராஜினாமா செய்து, மக்களவை தேர்தலை தென் சென்னையில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக அமையவில்லை. 2,90,683 வாக்குகளை பெற்றவர், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை விட 2,25,945 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார்.
ஆனால், மக்களின் முடிவை ஏற்பதாக தெரிவித்தவர் தொடர்ந்து மக்கள் பணியில் நீடிக்கப்போவதாக கூறினார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சமீபகாலமாக பாஜகவில் சமூகத்திற்கு விரோதமாக இருப்பவர்கள் இருப்பதாகவும் கூறி, நேரடியாக விமர்சனத்தையும் வைத்தார்.
இது நேரடியாக மாநில தலைமையை எதிர்த்து பேசியதாகவே சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகின. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா தமிழிசையை விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்றையும் வெளியிட்டார். வெளிச்சத்திற்கு கட்சியின் மோதல் வந்துவிட்டதாக செய்திகளில் எழுதப்பட்டது. இந்த நிலையில் தான், மோதல் தொடர்பாக கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகின.
அமித்ஷா கண்டிப்பு
இன்று ஆந்திர மாநிலத்தின் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், தமிழிசைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொண்டார்.
தமிழிசைக்கு மிரட்டல்?#BJP #Tamilisai #Annamalai #amitsha pic.twitter.com/86SIgvme1a
— Soundermohan (@SoundermohanK) June 12, 2024
மேடையில் அமர்ந்திருந்த அமித் ஷாவிடம் மரியாதை நிமித்தமாக தமிழிசை பேச சென்ற நிலையில், அமித் ஷா ஏதோ ஒரு விஷயம் கூறி கடிந்து கொண்டார்.
இந்த வீடியோ தற்போது வைரலாக, விஷயங்களை முடிச்சி போட்டு எழுத துவங்கிவிட்டனர்.