அண்ணாமலை - தமிழிசை முற்றிய மோதல்!! உடனடியாக ஆக்ஷன் எடுத்த பாஜக மேலிடம்!!
தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் உருவாகியுள்ளது என தொடர்ந்து செய்திகள் வெளிவர துவங்கிவிட்டன.
மோதல்
தேர்தல் தோல்விக்கு பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜகவில் சமூகத்திற்கு விரோதமாக இருப்பவர்கள் இருப்பதாகவும் கூறி, நேரடியாக விமர்சனத்தையும் வைத்தார்.
இதனை தொடர்ந்து இரு தரப்பாக பிரிந்து மோதல் உருவாகியிருக்கின்றது. அவரின் கருத்தை தொடர்ந்து காரசாரமான விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் வெளிப்பட துவங்கின. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் திருச்சி சூர்யா தமிழிசையை விமர்சிக்கும் வகையில் வெளிப்படையாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தலையிட்ட மேலிடம்
அதன் நீட்சியாக சமூகவலைத்தளங்களில் இரு தரப்பு மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
இந்த இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பாஜக நிலைக்குழு உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன்,வானதி சீனிவாசன் ஆகியோரிடம் கட்சி மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தேர்தலில் தனித்து போட்டியிட்டால் தான், கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்துள்ளது என அண்ணாமலை தெரிவித்து வருகிறார். அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டில் கட்சியின் சீனியர் நிர்வாகிகள் இருப்பதாக கூறப்படுகிறது.