அவரின் புகழை ஏற்கமுடியல'யா? பாஜகவில் உட்கட்சி மோதல் - தமிழிசையை சீண்டும் அண்ணாமலை ஆதரவாளர்கள்!!
தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளதாக என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
தமிழிசை கருத்து
தேர்தலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கட்சியின் மூத்த தலைவர்கள் குறித்து விமர்சித்து கருத்து வெளியிடும் பாஜக ஐடி பிரிவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் பகிரங்கமாக தெரிவித்தார்.
அதே போல, சமீபகாலமாக கட்சியில் சமூகத்திற்கு விரோதமாக இருப்பவர்கள் இருப்பதாகவும் கூறி, நேரடியாக விமர்சனத்தையும் வைத்தார். இதனை தொடர்ந்து இரு தரப்பாக பிரிந்து மோதல் உருவாகியிருக்கின்றது. அவரின் கருத்தை தொடர்ந்து காரசாரமான விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் வெளிப்பட துவங்கின.
அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருக்கும் திருச்சி சூர்யா சிவா, தமிழிசை பதிலடி கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரின் பதிவில்,
உட்கட்சி மோதல்
அக்கா வணக்கம் தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா? குற்ற பின்னணி உள்ளவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான் வேண்டுமென்றால் நான் பட்டியல் தருகிறேன்.
கட்சியின் வளர்ச்சியையும் தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம்.
அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அதிகம் இடங்கள் ஜெயித்திருக்கும் என்று தேசியத்தின் முடிவுக்கு எதிரான உங்கள் கருத்து கட்சி கட்டுப்பாடா? பாஜகவுக்குள் தேர்தல் நிதிகள் சரியாக போய் சேரவில்லை என்ற பொதுத்தளத்தில் நீங்கள் பேசிய பிறகுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் அது பேசும் பொருளாக ஆகியது இது கட்சி கட்டுப்பாடா?
அக்கா வணக்கம் @DrTamilisai4BJP
— Tiruchi Suriyaa मोदी परिवार (@TiruchiSuriyaa) June 9, 2024
தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா?
குற்ற பின்னணி உள்ளவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில்… pic.twitter.com/iEzbPtQctw
இப்படி எல்லாம் கட்டுப்படாத முன்னால் மாநிலத் தலைவரின் கருத்திற்கு அமைதி காக்கும் தேசியம் அதற்கு எதிர் வினையாற்றும் எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதை சந்திக்க தயாராக உள்ளோம்.
பதவிக்காக நாங்கள் இந்த கட்சியில் இல்லை அண்ணனின் அன்புக்காக மட்டுமே உள்ளோம்.