டெல்லிக்கு போகும் அண்ணாமலை..மீண்டும் மாநில தலைவர் பொறுப்பேற்கும் தமிழிசை?
தமிழக பாஜக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடம் கூட வெல்லவில்லை.
தமிழக பாஜக
அதிமுக கூட்டணியில் பயணித்த தமிழக பாஜக, தலைவர் அண்ணாமலை - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக, கூட்டணியை முறித்தன.
தேர்தலில் பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி மற்றும் பல சிறு கட்சிகளை ஒன்றிணைத்து சந்தித்த பாஜக, சில இடங்களில் 2-ஆம் பிடித்தாலும், அவை வெற்றிகளாக மாறவில்லை.
தேர்தலுக்கு முன்பு வரை எப்படியும் 2 இலக்க எண்களில் இடங்களை வெல்வோம் என கூறி வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தற்போது மெச்சி வருகின்றார்.
தலைவர்
கணிசமான வளர்ச்சியை கட்சி தமிழகத்தில் அடைந்திருப்பதால், அண்ணாமலையின் பணியை சிறப்பிக்கும் விதமாக அவர், மத்திய அமைச்சரவைக்கு செல்வார் என தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
ஆனால், இன்னும் எந்த வித அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை. அதே நேரத்தில், ஆளுநர் பதவியை துறந்து மக்கள் பணிக்கு வந்த தமிழிசைக்கு மக்கள் சிறப்பான வரவேற்பை அளிக்கவில்லை.
அண்ணாமலை, மாநில பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படும் நிலையில், அவருக்கு அடுத்து மீண்டும் தமிழிசை தான் அப்பதவிக்கு வருவார் என பலரும் கூறுகிறார்கள்.
ஆனால், 2026-ஆம் தேர்தலை எதிர்நோக்கி ஓடும் அண்ணாமலையை தற்போது மாற்றுவது சரியான பணியாக இருக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.