அனிருத்துடன் டேட்டிங்; திருமணம் - முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் அப்பா!
கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த வதந்திக்கு அவரது அப்பா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் மாமன்னன் மற்றும் சைரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
தற்போது, தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சமந்தா ரோலில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் கீர்த்தி பல கிசுகிசுக்களில் சிக்கினார். அதில் ஒன்று இசையமைப்பாளர் அனிருத்தோடு டேட்டிங் சென்றதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி பரவிய வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கீர்த்தி சுரேஷின் அப்பா, இது ஆதாரமற்ற விஷயம். இது போன்ற செய்திகளை தொடர்ந்து பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்மூலம் பரவி வரும் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.