விஜய்க்கு த்ரிஷாவும், கீர்த்தி சுரேஷ் மட்டும் தான் தெரியும் - பொங்கிய பிரபலம்!
நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 GOAT திரைபடத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தளபதி 69 படத்தில் கமிட்டாகியுள்ளார். அதுதொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், அரசியலில் தீவிரமாக களமிறங்கி தனது கட்சி பெயரான தமிழக வெற்றி கழகம் என்பதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
அரசியல் வருகை
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிரபல மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், விஜய்க்கு தமிழும் தெரியாது தேசியம் என்றால் தெரியாது, எதுவுமே தெரியாது. அவருக்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் தான். கொள்கை ரீதியாகவும் அம்பேத்கர், பெரியார், காமராஜர் பத்தி எதுவும் தெரியாது.

விஜய் ரசிகர்களும் அப்படி தான் இருக்கிறார்கள். விஜய் இன்னும் அரசியல்மயப்படுத்தவில்லை. அப்படி செய்தால் யாரும் அவர் பின்னாடி வரமாட்டார்கள் என்று விமர்சித்துள்ளார்.
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி IBC Tamil
எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு மேலும் இரண்டு சிறைச்சாலை பேருந்துகள் தேவை : அமைச்சர் அறிவிப்பு IBC Tamil