தாலியை எடுத்து கையில் கொடுத்த விஜய் - கொந்தளித்த மனைவி சங்கீதா!
நடிகர் சாந்தனு விஜய் குறித்து பகிர்ந்த தகவல் ஒன்று கவனம் பெற்றுள்ளது.
விஜய்- சங்கீதா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 GOAT திரைபடத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தளபதி 69 படத்தில் கமிட்டாகியுள்ளார். அதுதொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், அரசியலில் தீவிரமாக களமிறங்கி தனது கட்சி பெயரான தமிழக வெற்றி கழகம் என்பதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
சாந்தனு தகவல்
முன்னதாக, நடிகர் சாந்தனு பாக்யராஜ் தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து கடந்த 2015ல் திருமணம் செய்துக்கொண்டார். இதில், நடிகர் விஜய் கலந்துக் கொண்டார். அப்போது அவர் தான் சாந்தனுவிற்கு தாலி எடுத்துக் கொடுத்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலானது.

இதையறிந்த விஜய்யின் மனைவி சங்கீதா நீங்கள் எப்படி தாலி எடுத்துக்கொடுக்கலாம். அது பெரியவர்கள் செய்யவேண்டிய விஷயம் என திட்டியுள்ளார். இதனை சாந்தனு பேட்டி ஒன்றில் பகிர்ந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil