விஜய்யை விடுங்க.. மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு தெரியுமா? அடேங்கப்பா!
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சங்கீதா விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். அவரது மனைவி சங்கீதா. சமீப காலமாக இருவருக்குமான விவாகரத்து சர்ச்சை தான் தான் ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது.
அதற்கு காரணமாக சில நடிகைகளை கூறுவதும் வழக்கமாக உள்ளது. ஆனால், மகளின் படிப்புக்காக சங்கீதா லண்டனில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும், விவாகரத்து பற்றியெல்லாம் யோசிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
சொத்து மதிப்பு
இந்நிலையில், விஜய் மனைவி சங்கீதாவுக்குச் சொந்தமான சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் சொத்து மதிப்பு தவிர சங்கீதாவின் சொத்து மதிப்பு 400 கோடிக்கு மேல். விஜய் வாங்கிய பல சொத்துக்கள் சங்கீதா பெயரில் உள்ளது.
மேலும், அவரது தந்தைக்கும் பல கோடி ரூபாய் சொத்து உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில், லியோ படத்திற்காக விஜய் 120 கோடியை வெகுமதியாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.