அந்த மாதிரி நடிக்க ஆசை; முத்தக்காட்சிக்கு சம்மதம்? கீர்த்தி சுரேஷ் ஓபன்டாக்!
நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில், 'பேபி ஜான்' என்ற இந்தி படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. அதில் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். இதில் கீர்த்தி முத்தக்காட்சியில் நடிக்கவுள்ளாராம். அதற்கு சம்மதித்தப் பிறகே படத்தில் ஒப்பந்தமானதாகக் கூறப்படுகிறது.
முத்தக் காட்சிக்கு சம்மதம்?
இதற்கிடையில், முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. கோடி பணம் கொடுத்தாலும் அதுபோன்ற காட்சியில் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு இன்னும் பொறுப்போடு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.
நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த படத்திற்கு பின்பு தான் வந்தது. ஆனால் எல்லா படங்களும் அப்படி அமையாது. செட்டில் இருந்து வந்த பிறகும் அந்த கதாபாத்திரத்துடன் எமோஷன் ஆன ஒரு உறவு நீடிக்கிறது என்றால் அது நல்ல படம்.
அந்த மாதிரியான மேஜிக் சில நேரங்களில் மட்டுமே நடக்கும். அப்படியான படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.