விஜய் இனி நடிக்கமாட்டாரு; அப்படி இருக்கு, ஒரே அழுகைதான் - கீர்த்தி சுரேஷ் தகவல்
விஜய் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்
நடிகர் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் சேர்ந்து நடித்துள்ள படம் சைரன். வரும் 16-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில், படக்குழுவினர் தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெயம் ரவியிடம், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. உடனே இதுகுறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்,
விஜய் அரசியல் வருகை
"தளபதி விஜய் தரமான படங்களை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார். அரசியல் அவருடைய அடுத்தகட்டம். நாம் ஆதரவு கொடுக்கவேண்டும். விஜய் சார் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும் குழந்தை அழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பார்த்தேன். ஒரு குழந்தைக்கே அப்படி இருக்கு என்றால், அதுபோல நமக்கும் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயம் ரவி, "தளபதி விஜய் நமக்கு நிறைய நல்ல படங்களை கொடுத்து இருக்கிறார். அவர் நடித்த படங்களை நாம் மீண்டும் பார்க்கலாமே" எனக் கூறியுள்ளார்.
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil