அதற்காக ஆபரேஷன் ஏதும் செய்தீர்களா? கொந்தளித்த கீர்த்தி சுரேஷ்!
உடல் எடை குறைத்தது குறித்த தகவல்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில்,
உடல் எடை
மகாநதி படத்தில் நடித்த முடித்த பிறகு தான் நான் உடற்பயிற்சி செய்யவே தொடங்கினேன். அதற்கு முன்பும் உடற்பயிற்சி செய்திருக்கிறேன் என்றாலும் கூட கடினமான உடற்பயிற்சிகளை செய்தது கிடையாது. எட்டு மாதத்தில் 10 கிலோ எடை குறைந்தேன். பலரும் நினைப்பது போல நான் ஒரு மாதத்திலோ அல்லது இரண்டு மாதத்திலோ எடை குறைந்து விடவில்லை.

இன்னும் சிலர் ஆபரேஷன் ஏதேனும் செய்து கொண்டீர்களா.? என்றெல்லாம் கேட்டார்கள். அப்படியெல்லாம் எதுவும் நான் செய்து கொள்ளவில்லை.
உணவு முறையில் சிறு மாற்றங்கள் செய்தேன். உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன் அவ்வளவுதான் எனத் தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil