அதை என் வீட்டுக்கு வந்து பாத்தீங்களா? பிரபலத்தை வெளுத்தெடுத்த கீர்த்தி பாண்டியன்!
பயில்வான் ரங்கநாதனுக்கு, நடிகை கீர்த்தி பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார்.
மோசமான கேள்வி
நடிகர் அசோக் செல்வனுக்கும், நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் சமீபத்தில் திருமணம் ஆனது. தொடர்ந்து, கீர்த்தி பாண்டியன் குறித்த பாடிஷேம் ட்ரோல் மற்றும் நிறவெறி கமெண்ட்டுகள் குவிந்தன.
தற்போது, இவர் நடித்துள்ள கண்ணகி படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் கீர்த்தி பாண்டியனிடம் பயில்வான் ரங்கநாதன், வீட்டில் தான் இருவரும் சண்டை போடுறீங்கனா பட ரிலீஸிலும் ஏன் இப்படி சண்டை போடுறீங்க என கேட்டுள்ளார்.
விளாசிய கீர்த்தி
உடனே, கீர்த்தி என் வீட்டுக்கு வந்து பார்த்திங்களா? எங்கள் இருவருக்குள் சண்டை எப்போது வந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஸ்கை மூன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள கண்ணகி படமானது நாளை (டிசம்பர் 15) திரையரங்கத்தில் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் ட்ரெய்லர் வரை கவர்ந்த நிலையில் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.