எப்பவுமே உடம்ப பத்தி தான் பேசுவாங்க - அப்பெல்லாம் அழுதுருவேன்..!! கீர்த்தி பாண்டியன் !!
கீர்த்தி பாண்டியன் தனியார் யூடியூப் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கீர்த்தி பாண்டியன்
அசோக் செல்வனுடன் திருமணமானத்தில் இருந்து தொடர்ந்து பொதுவெளியில் பெரும் கவனம் ஈர்த்து வருகின்றார் கீர்த்தி பாண்டியன். கண்ணகி என்ற படத்தின் வெளியீட்டிற்கு காத்திருக்கும் கீர்த்தி பாண்டியன், படத்தை தீவிரமாக ப்ரோமொட் செய்து வருகிறார்.
தனியார் யூடியூப் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சிறு வயதில் இருந்தே தான் நிறைய எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதாக குறிப்பிட்டு, அந்த விமர்சனங்களை தான் எவ்வாறு எடுத்துக்கொள்வது என்ற புரிந்து எளிதாக வந்துவிடவில்லை என குறிப்பிட்டார்.
அப்பெல்லாம் அழுத்துருவேன்
நீண்ட காலமாகவே தன்னை குள்ளமாக, ஒல்லியாக இருப்பதாகவும், தான் மிகவும் கருப்பாக இருந்ததாகவும் கூறிய கீர்த்தி பாண்டியன், அதற்கு காரணம் தான் எப்போதுமே வெயிலிலே சுற்றிக்கொண்டிருந்ததாக கூறினார்.
அந்த சமயங்களில், தன்னுடைய தோற்றத்தை பற்றி, எதிர்மறையான விமர்சனங்கள் வரும்போது பயங்கரமாக அழுவேன் என்ற அவர், தற்போது யோசித்தால், அந்த காலகட்டத்திற்கு நன்றி சொல்ல விரும்புவதாகவும் கூறினார். கண்ணகி திரைப்படம் வரும் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதே நாளில் அசோக் செல்வனின் "சபாநாயகன்" படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர்கள் நடிப்பில் பாரஞ்சித் தயாரிப்பில் "ப்ளூ ஸ்டார்" என்ற படமும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Singappenne: ஆனந்திக்காக துணிந்த அன்பு.. விழிபிதுங்கி நிற்கும் கருணாகரன்- சூடுபிடிக்கும் கதைக்களம் Manithan
