இப்போ தான கல்யாணம் ஆச்சு..? அதுக்குள்ள மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்!!
நட்சத்திர தம்பதிகள் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்
சூது கவ்வும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ந்து நாயகனாக மாறினார். சிறப்பான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர் பிட்சா 2, தெகிடி, ஓ மை காதலே, நித்தம் ஒரு வானம், போர் தொழில் என வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம், நடிகையும் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை மணந்து கொண்டார். கீர்த்தி பாண்டியன் தும்பா என்ற படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமாகினார். தற்போது இவர், அசோக் செல்வனுடன் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
Husband vs Wife at the box office on December 15.@AshokSelvan's jolly entertainer #SabaNayagan and @iKeerthiPandian's intense drama #Kannagi to release on the same date.
— Siddarth Srinivas (@sidhuwrites) November 26, 2023
A unique juncture for the newlyweds ? pic.twitter.com/GCxI6IbKqh
இந்நிலையில் தான் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள "சபாநாயகன்" என்ற படமும், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள "கண்ணகி" என்ற படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் 15-ஆம் தேதி இந்த படங்கள் வெளியாகும் என்ற நிலையில், இரு படமும் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.