வைரலாகும் ரியாக்சன்கள் - மீம்ஸ் குறித்து மனம் திறந்த காவ்யா மாறன்

Sunrisers Hyderabad TATA IPL Kavya Maran
By Sumathi Jul 01, 2025 10:15 AM GMT
Report

தன் ரியாக்சன் தொடர்பான மீம்ஸ்கள் குறித்து காவ்யா மாறன் மனம் திறந்துள்ளார்.

காவ்யா மாறன் 

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன். ஐபிஎல் தொடரில் 2016ஆம் ஆண்டுதான் கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வென்றது.

kavya maran

ஐபிஎல் சீசன் வந்துவிட்டால் நிச்சயம் காவ்யா மாறனின் பெயரும் எப்போதும் டிரெண்டிங்கில் இருப்பது வழக்கம். காவ்யா மாறன் ஹைதராபாத் பேட்டர் அடித்த சிக்ஸருக்கு கொடுத்த ரியாக்சன், பௌலர் எடுத்த விக்கெட்டுக்கு கொடுத்த ரியாக்சன்,

அவுட்டாகும் போது கொடுத்த ரியாக்சன் என அவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகும். இந்நிலையில் காவ்யா மாறன் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

ஹர்த்திக் அணிந்திருந்த ரிச்சர்ட் மில்லே வாட்ச் - இவ்வளவு கோடியா?

ஹர்த்திக் அணிந்திருந்த ரிச்சர்ட் மில்லே வாட்ச் - இவ்வளவு கோடியா?

வைரல் ரியாக்சன்ஸ்

"நீங்கள் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் என்னுடைய உணர்ச்சிகள் எனலாம், நான் அங்கிருக்க வேண்டியது எனது வேலை ஆகும். ஹைதராபாத் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது, நான் அங்கேயே தான் உட்கார வேண்டும். நான் உட்காரக்கூடிய ஒரே இடம் அது மட்டும்தான்.

வைரலாகும் ரியாக்சன்கள் - மீம்ஸ் குறித்து மனம் திறந்த காவ்யா மாறன் | Kavya Maran About Her Ipl Viral Memes Reactions

ஆனால், நான் அகமதாபாத் அல்லது சென்னைக்கு சென்று போட்டிகளை பார்த்தாலும், நான் தூரத்தில் பாக்ஸில் எங்காவது அமர்ந்திருந்தாலும் கேமராமேன் என்னை கண்டுபிடித்துவிடுகின்றனர். அதன்மூலம், அவை எப்படி மீம்ஸ்களாக மாறுகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

சன்ரைசர்ஸை அணியை பொறுத்தவரை, அது உண்மையிலேயே இதயத்திற்கு நெருக்கமானது. நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் உங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் முழுமையாக செலுத்தும்போது, ​​இயல்பாகவே அதன் வெற்றிகள் மற்றும் தோல்விகளுடன் நீங்கள் மிகவும் தனிப்பட்ட முறையில் பற்றுக் கொள்வீர்கள் என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.